ஏர் கன் உடன் திரிந்த சென்னை இளைஞர் கைது செய்யப்பட்ட வழக்கில் தப்பி ஓடியவர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பானாங்குளம் பகுதியில் ஏர் கன் உடன் திரிந்த சென்னையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பி ஓடிய மேலும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பானங்குளம் பகுதியில் புதன்கிழமை மாலை சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றித்திரிந்த சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(34) கைது செய்த கிருஷ்ணன்கோவில் போலீசார் அவரிடமிருந்து ஏர் கன்னை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜானை நேற்று மதுரையில் வைத்து போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், வீடுகளில் திருடும் நோக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருவரும் சுற்றித்திரிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)