அமெரிக்காவின் வாஷிங்டனில் பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு சார்பில் உலக பள்ளிகள் அணி சாம்பியன் போட்டி நடைபெற்றது.

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி யில் உள்ள எபிஸ்கோபல் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டியில் 250க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து 55 நாட்டின் சிறந்த பள்ளி அணிகள் கலந்து கொண்டன.
இதில் அமெரிக்கா ஆஸ்திரேலியா இலங்கை மங்கோலியா ஹங்கேரி கஜகஸ்தான் உஸ்பெகிஸ்தான் என 55 நாடுகளை சேர்ந்த பள்ளிகள் அணி கலந்து கொண்டது.
இந்தியாவிலிருந்து வேலம்மாள் மெட்ரிக் பள்ளியை சார்ந்த சதுரங்கப் போட்டி வீரர்கள் கலந்து கொண்டனர்.

அணித்தலைவர் வேலவன் தலைமையில் 5 பேர் கலந்து கொண்டனர் ஒரு வாரம் நடைபெற்ற இந்த போட்டியில் துவக்கம் முதலே எந்த நாடோடும் தோல்வியே சந்திக்கமல் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்று சாதனைப் படைத்தனர்.
இந்நிலையில் விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தவர்களுக்கு சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.