• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விரிவாக்கம் செய்யப்படும் சென்னை மாநகராட்சி

Byவிஷா

May 16, 2024

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளை, சென்னை புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளையும் இணைத்து, 250 வார்டுகளாக விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகராட்சி 174 சதுர கி.மீ. பரப்பளவில் 155 வார்டுகளுடன் 10 மண்டலமாக செயல்பட்டது. நாட்டின் பெருநகர பட்டியலில் சென்னையை கொண்டு வரும் நோக்கில் 2011-ம் ஆண்டு சென்னை புறநகரில் இருந்த 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகைள இணைத்து 424 சதுர கி.மீ. பரப்பளவில் சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதன்படி 200 வார்டுகள், 15 மண்டலங்களாக தற்போது மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி எல்லையை மீண்டும் விரிவாக்கம் செய்ய அரசுசெய்துள்ளது. இதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி செந்தில்குமார் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி சென்னை புறநகரில் உள்ள மேலும் 50 ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க திட்டம் வகுத்துள்ளது.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர், சோழிங்க நல்லூர் சட்டசபை தொகுதியில் உள்ள சில ஊராட்சிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் மதுரவாயல், பூந்தமல்லி, மாதவரம், பொன்னேரி தொகுதிகளில் சில ஊராட்சிகள காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள சில ஊராட்சிகள் என 50 ஊராட்சிகளை சென்னையுடன் சேர்க்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.