செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. மொத்தம் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி 23.29 அடியை எட்டியது. இதனால் முதல்கட்டமாக நேற்று காலை முதல் ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை நீர் திறப்பின் அளவு 4,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இன்று (டிச.,14) பகல் 12 மணி முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீராக அதிகரிக்கப்பட்டது.
திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கும், அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு : வெள்ள அபாய எச்சரிக்கை
