• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…

Byகாயத்ரி

May 28, 2022

கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் பூத் அமைக்கப்பட்டுள்ளது. உழவூர் டவுன் செயின்ட் ஜோவன்ஸ் பள்ளிக்கு அருகில் உள்ள போஸ்டில் கேரள மின்சார வாரியம் சார்ஜிங் பூத் அமைத்துள்ளது. அடையாளத்திற்காக மின்கம்பத்தில் பச்சை நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் மற்றும் ஆட்டோரிக்ஷாக்களுக்கு இங்கு கட்டணம் விதிக்கப்படும். இதில் ஆப் மூலமாக பணம் செலுத்த வேண்டும். சார்ஜிங் பூத் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் ஜோனிஸ் பி.ஸ்டீபன் கூறியதாவது: மோனிப்பள்ளி சாலையோர ஓய்வு இல்லம் அருகே, சேத்துக்குளத்தில் சார்ஜிங் பூத் அமைக்க அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார்.