விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் இ எஸ் ஐ காலனி பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வழிபடக்கூடிய அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா கொடி ஏற்றத்துடன் கடந்த 5ம் தேதி துவங்கியது. இதை அடுத்து ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. அக்னி சட்டி ஊர்வலம் முளைப்பாரி ஊர்வலம் கரகம் எடுத்தல் பால்குடம் எடுத்தல் 21 தீச்சட்டி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது .

ஒன்பதாம் நாள் திருவிழாவான பூக்குழி திருவிழா 13.08.2025 அதிகாலை 5 மணி அளவில் நடைபெற்றது. இதில் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர்.
முன்னதாக அதிகாலை 4 மணி அளவில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும் உருவம் எடுத்தும் அக்கினிச்சட்டி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். பூசாரி மற்றும் மருளாடி கரகம் எடுத்து ஊர்வலமாக வந்து பூக்குழி இறங்கினர் இதைத் தொடர்ந்து பக்தர்களும் வரிசையாக பூக்குழி இறங்கினர். தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

விழா ஏற்பாடுகளை தலைவர் சுப்புராம். செயலாளர் கண்ணன். பொருளாளர் மணிகண்டன். மற்றும் விழாக் காமிட்டியினர் செய்திருந்தனர்