• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 4 நாட்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரளா மற்றும் அதனையொட்டிய பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னையில் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். நாளை மற்றும் நாளை மறுநாளில், தென் மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.

வரும் 21ந்தேதி கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில், 6 செ.மீ. மழை பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.