• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தெற்கு கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் 11ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தெற்கு கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், 10, 11ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நேற்றைய நிலவரப்படி, 24 மணி நேரத்தில் எங்கும் மழை பெய்யவில்லை; மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை” என்று அதில் கூறப்பட்டுள்ளது.