• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

பிப்ரவரி 5 வரை தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு!!

ByA.Tamilselvan

Feb 2, 2023

இலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டம் காரணமாக தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரியில் 5ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்
இலங்கை அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் தற்போது திரிகோணமலை அருகே கரைந்துவிட்டது . இதன் காரணமாக,இன்று (பிப். 2) தென் தமிழ்நாடு மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழ்நாடு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 03-02-2023, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். 04-02-2023, தென் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். 05-02-2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.