நவ.26, 27 ஆகிய நாட்களில் டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தனது சமூகவலைத்தளப் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமூகவலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது..,
“டெல்டா மாவட்டங்களில் இன்று (நவ.25) இரவு தொடங்கி அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. 26. 27-ல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால் பகுதிகள் 26, 27 தேதிகளில் மிக கனமழையை எதிர்பார்க்கலாம். அதுவும் 26-ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு 26, 27 தேதிகளில் இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு அலர்ட் விடுக்கப்பட வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னையைப் பொருத்தவரை பொறுமையாக இருப்போம். இன்றைக்கு இரவு இப்பகுதிகளில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பில்லை.
குறிப்பு: ஐரோப்பிய வானிலை அய்வு மைய கணிப்புகளின் படி காற்றழுத்த தாழ்வு நிலையானது தமிழகத்தில் கரையைக் கடக்கும் என்றுள்ளது அதேவேளையில் இந்திய வானிலை ஆய்வு மையமானது இலங்கை, பர்மாவில் நிலவும் காற்றழுத்த நிலையானது புயலாக மாறும் எனக் கணிக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.” எனப் பதிவிட்டுள்ளார்.
