• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

Byவிஷா

Dec 25, 2023

தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மீண்டும் கன மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் நிகழ்வு வங்க கடலில் நிலவ இருக்கிறது. இது நகரத் தொடங்கும் போது அதிக அளவில் மழை இருக்கும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளனர். ஏற்கனவே பெய்த கனமழையால் சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.