• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு

ByA.Tamilselvan

Jul 28, 2022

சோழபேரரசின் ராஜமாதா என போற்றப்படுகிற செம்பியன் மாதேவி சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நாகை கைலாசநாதர் கோவிலில் உள்ள செம்பியன் மகாதேவி சிலை போலியானது என்பதும், 1929ம் ஆண்டு இந்தியாவில் இருந்து சிலை கடத்தப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. செம்பியன் மகாதேவி சிலை சோழ வம்சத்தை சேர்ந்த 1000 வருடத்திற்கும் மேல் பழமையான உலோக சிலையாகும். 10ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சோழப் பேரரசர் கண்டராதித்தரின் பட்டத்தரசி செம்பியன் மகாதேவி என்பது வரலாறு. செம்பியன் மகாதேவி உலோக சிலையை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.