• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மகரவிளக்கை முன்னிட்டு சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை சார்பாக விழா

Byகாயத்ரி

Jan 5, 2022

ஸ்ரீ சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை என்பது தமிழகம் முழுவதும் எல்லா பக்கமும் மகரவிளக்கை முன்னிலைப்படுத்தி சபரிமலையில் வரும் ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு திருநாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஐயப்ப பக்தர்கள், குருசாமிகள். ஆன்மீக பக்தர்கள் மற்றும் பெண்களை ஒருங்கிணைத்து திருவிளக்கு பூஜைகள், சுதர்சன ஹோமம், கலசாபிஷேக பூஜை, கோமாதா பூஜைகள்,ஐயப்ப தர்மத்தை நிலைநாட்டுவதற்கும் இந்த பூஜைகள் சிறப்பிக்கும் விழாவாக அமைந்துள்ளது.

அதில் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாட்சி வட்டம் பெரிய நெகமம் பகுதியில் சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி சேவை கிளை சார்பாக அப்பகுதியின் சேவை கிளைத்தலைவர் R.V.S மாரிமுத்து ஜீ குருசாமி கலந்துக்கொண்டு வரவேற்புரையாற்றிஆன்மீக பணியான ஐயப்ப தர்மத்தை நிலைநாட்டும் வகையிலே தொடர்ந்து விழா நடைபெற்றது. உலகம் போற்றக் கூடிய மாகப் பிரபு எம்பெருமான் சபரிமலையில் தர்ம நீதிக்காக உலகளவில் நோய் நொடியினை தீர்க்கவும் , மக்கள் செழிப்பாக வாழ, இந்த கொரோனா பிடியிலிருந்து நீங்க இவ்வவிழா ஐயப்பனை வேண்டி நடத்தப்பட்டது.

இவ்விழாவில் ஆத்மார்தமாக பூஜை செய்தவர் ஸ்ரீபிரம்மஸ்ரீ C.S.கேசவலால் ஸ்ரீ சபரிமலை ஐயப்ப சுவாமியின் ஆயுதகளரி பயிற்சி ஸ்தலமும், மாலியபுரத்து அம்மனின் மூலக்குடும்பம் ஆகிய ஆலப்புழா முகம்மா சீரப்பஞ்சிரா-முக்கால்வட்டம் ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோயில், 2019 வருடம் சபரிமலை மேல்சாந்தி A.K.சுதிர்நம்பூதிரி கைாயல் பூஜை செய்யப்பட்டு பக்தகோடிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஸ்ரீ சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவையின் மாநிலத் தலைவர் R.V.S மாரிமுத்து ஜீ இந்த அமைப்பின் கொடியை சரண கோஷத்துடன் ஏற்றினார்.

மேலும் விழாவில் பழனி முருகன் கோவில் குருக்கள் ஸ்ரீ சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவையின் மாநில செயலாளர் G.சந்திர மௌளீஸ்வரன் தீபம் ஏற்றி மலரித்தூவி வரவேற்றார். ஸ்ரீ சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவையின் மாநில அமைப்புச் செயலாளர் M.ராஜேந்திர குருசாமி தலைமையில் சீரும் சிறப்போடும் நடைப்பெற்றது.இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துக்கொண்டு திருவிளக்கு பூஜையிலும் மற்றும் கோமாதா பூஜையிலும் ஈடுபடுத்திக்கொண்டனர்.

பகவதி ஹோமம்,ப்ரதிங்கரா ஹோமம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் பல ஐயப்ப பக்தர்கள் இதில் கலந்துக்கொண்டு 3 நாட்கள் அன்னாதானமும் சிறப்பாக நடந்தது.இது மட்டுமில்லாமல் எல்லா மாவட்டங்களுக்கும் இது ஒரு முன்னுதாரணமாக விளங்கியுள்ளது.கோவிலை தூய்மையாக வைத்திருத்தல், தூயப்பணிகளுக்கு முன் வருதல், பிளாஸ்டிக்கை தவிர்த்தல் போன்றவற்றை மக்களுக்கு எடுத்துரைத்து ஒரு பிரச்சாரமாக சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை முன்னிலைப்படுத்தி செய்துள்ளது.