• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மகரவிளக்கை முன்னிட்டு சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை சார்பாக விழா

Byகாயத்ரி

Jan 4, 2022

ஸ்ரீ சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை என்பது தமிழகம் முழுவதும் எல்லா பக்கமும் மகரவிளக்கை முன்னிலைப்படுத்தி சபரிமலையில் வரும் ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு திருநாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஐயப்ப பக்தர்கள், குருசாமிகள் மற்றும் பெண்களை ஒருங்கிணைத்து திருவிளக்கு பூஜைகள், சுதர்சன ஹோமம், கலசாபிஷேக பூஜை, கோமாதா பூஜைகள்,ஐயப்ப தர்மத்தை நிலைநாட்டுவதற்கும் இந்த பூஜைகள் சிறப்பிக்கும் விழாவாக அமைந்துள்ளது.

அதில் ஒரு வண்ணமாக கோவை மாவட்டம் பொள்ளாட்சி வட்டம் நெடும் பகுதியில் ஐயப்பனின் மகரவிளக்கு திருநாளை முன்னிட்டு இந்த விழா நடைபெற்றது.இந்த பூஜையில் மாநிலத் தலைவர் R.V.S மாரிமுத்து ஜீ கலந்துக்கொண்டு சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி அமைப்பின் கொடியை ஏற்றி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.தலைமை குருக்கள் சந்திரமோரிசன் குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை காட்டி விழாவை துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துக்கொண்டு திருவிளக்கு பூஜையிலும் மற்றும் கோமாதா பூஜையிலும் ஈடுபடுத்திக்கொண்டனர்.பகவதி ஹோமம்,ப்ரதிங்கரா ஹோமம் நடைப்பெற்றது.இந்த விழாவில் சபரிமலை ஐயப்ப சுவாமிகள் ஆயுதகளரி பயிற்சி என்ற குருஸ்தலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது.இந்த முழு பூஜையை கேசவலால் நடத்தி வைத்துள்ளார்.2019 வருடம் சபரிமலை மேல்சாந்தி A.K.சுதிர்நம்பூதிரி நடத்தி வைத்திருந்தார்.

பல ஐயப்ப பக்தர்கள் இதில் கலந்துக்கொண்டு 3 நாட்கள் அன்னாதானமும் சிறப்பாக நடந்தது.இது மட்டுமில்லாமல் எல்லா மாவட்டங்களுக்கும் இது ஒரு முன்னுதாரணமாக விளங்கியுள்ளது.கோவிலை தூய்மையாக வைத்திருத்தல், தூயப்பணிகளுக்கு முன் வருதல், பிளாஸ்டிக்கை தவிர்த்தல் போன்றவற்றை மக்களுக்கு எடுத்துரைத்து ஒரு பிரச்சாரமாக சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை முன்னிலைப்படுத்தி செய்துள்ளது.இவ்விழாவை மாநில அமைப்புச் செயலாளர் ராஜேந்திர குருசாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.