திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே துத்தேரிபாளையம் பகுதியில் 100 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா அப்பகுதி மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள் முன்னாள் இந்நாள் மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் வஃபு வாரியம் சட்ட திருத்த மசோதாவிற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தும் பாஜக அரசு இரவு 3 மணியளவில் சட்ட மசோதா திருத்தம் செய்து விட்டனர். எனவும் சர்வதேச விமான நிலையத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தும் பணி முடிந்து சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.