இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான வரும் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 129 வது பிறந்தநாளை நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.,

இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நீதிமன்ற வளாகம் அருகில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்கள் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 129 வது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டியும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.,
தொடர்ந்து நேதாஜியின் திருவுருவப்படத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தினர்.,

தொடர்ந்து நேதாஜியின் கொள்கைகளை முன்னெடுப்போம், வாழ்க வாழ்கவே நேதாஜி புகழ் வாழ்கவே, ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டு பிறந்தநாளை கொண்டாடினர்.






