• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விருதுநகர் நகர் அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Byதரணி

Mar 28, 2023

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்றுக்கொண்டதை முன்னிட்டுவிருதுநகரில் நகர அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்:
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன்மூலம் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ,எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வானார்.. பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் அவர் போட்டியின்றி தேர்வானார். இதையடுத்து, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். பொதுச்செயலாளர் சான்றிதழை தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.


அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போறுப்பேற்றுக்கொண்டதும் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதே போல தமிழகம் முழுவதும் அதிமுகவின் உற்சாக மாக பட்டாசு வெடித்து கொண்டாடினர்
இதன் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆணைக்கிணங்க விருதுநகரில் நகர கழகம் சார்பாக அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினார்கள்.அதிமுகவினர் மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்களும் உற்சாகமடைந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் விருதுநகர் நகர செயலாளர் முகமது நெனார் , விருதுநகர் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாசறை சரவணன்,மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், முன்னாள் நகர்மன்ற தலைவி சாந்தி மாரியப்பன், பாசறை நகரச்செயலாளர் ராஜேஷ், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சுப்பிரமணியன், உள்ளிட்ட நகர அணி செயலாளர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று கொண்டாடினர்.