• Fri. Apr 26th, 2024

சேலம் ஊமகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டுவிழா

அரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் முதல் முறையாக ஆண்டுவிழா நடைபெற்ற நிகழ்வு சுற்றுவட்டார கிராமப்புற பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கலந்துகொண்டு சிறப்பித்தார்…..
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் மூலமாக புதிதாக அமைக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழுவினர் கல்விச் சீர்வரிசையை மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்து அசத்தினர்….
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டத்தில் உள்ள ஊமகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது அரை நூற்றாண்டுகளைக் கடந்தும் இந்தப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் தடம் பதித்து உள்ளனர் ஆனாலும் இதுவரையில் இந்தப் பள்ளியில் ஆண்டு விழா போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது இல்லை இந்த நிலையில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை மூலமாக புதிதாக துவங்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழுவினரின் முயற்சியால் முதல்முறையாக ஆண்டுவிழா ஏற்பாடு செய்து நடத்தப்பட்டுள்ளது இந்த விழாவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாதேஷ் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்புரை நிகழ்த்தியதை தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் கௌரி குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.

பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இதனை அடுத்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்த விழாவில் காடையாம்பட்டி வட்டார ஆசிரியர் பயிற்றுனர் காதர்செரிப் உதவி ஆசிரியர் வசந்தி பள்ளியின் முன்னாள் மாணவரும் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருமான ராஜ்குமார் உள்ளிட்ட பெற்றோர்கள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளி மேலாண்மை குழு தலைவர் கௌரி சுதாகர் தலைமையில் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கு தேவையான தளவாடப் பொருட்களை பள்ளி மேலாண்மை குழுவினர் பள்ளி மேலாண்மை குழுவினர், முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு அமைப்புகள் மூலமாக பெறப்பட்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளியில் வழங்கினர்.
சேலத்தில் அரை நூற்றாண்டுக்கு மேலாக இயங்கி வரும் அரசு தொடக்கப் பள்ளியில் முதல்முறையாக ஆண்டு விழா நடைபெற்ற நிகழ்வு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *