புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிகப்படியான இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கும் ரங்கசாமியை வரவேற்கும் வகையிலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் என்.ஆர் காங்கிரஸ் திருப்பட்டினம் தொகுதி பொதுச்செயலாளர் என்.ஜி.விஜயகுமார் ஏற்பாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட என்.ஆர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் திருப்பட்டினம் கடைவீதியில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

அப்போது முதலமைச்சர் ரங்கசாமி வாழ்க என முழக்கமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட என்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



