• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

டாஸ்மாக்கில் பட்டாகத்தியால் விற்பனையாளரை வெட்டி, கொள்ளை பரபரப்பான சிசிடிவி காட்சிகள்..,

ByKalamegam Viswanathan

Nov 26, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ரோட்டில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது இங்கு நேற்று இரவு பணி முடித்து திரும்பிய மேட்டுநீரேத்தான் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் குமார் என்பவரை திடீரென தலையில் ஹெல்மெட் அணிந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து பட்டாக்கத்தி மற்றும் ஆயுதங்களுடன் அவரை தலையில் தாக்கி கடையை திறக்கச் சொல்லி அங்கிருந்த சுமார் ஒரு லட்சம் பணம் மற்றும் விலை உயர்ந்த மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். இதனால் தலையில் காயமுற்ற கணேஷ் குமார் சோழவந்தான் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிசிடிவி ஆதாரங்களை கைப்பற்றி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் புழக்கம் உள்ள இடத்தில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.