• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

பயணிகள் மீது தனியார் பேருந்து மோதும் சி.சி.டி.வி காட்சிகள்

BySeenu

May 8, 2024

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மாநகர பேருந்து நிலையம் முன்பாக, நேற்று முன் தினம் அதிகாலை 5 மணி அளவில் ஏராளமான பயணிகள் பேருந்துக்காக காத்து இருந்தனர். அப்போது தனியார் நகரப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புகளை இடித்துக் கொண்டு, மற்றொரு பேருந்தில் மோதி நின்றது. பேருந்து மோதியதிலும், தடுப்புகள் விழுந்ததிலும், 8 பொதுமக்கள் லேசான காயம் ஏற்பட்டது. இந்த காட்சிகள், கட்டுப்பாட்டை இழந்த பேருந்தின் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக காட்டூர் போக்குவரத்து பிரிவு காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. தனியார் நகரப் பேருந்தில் பிரேக் திடீரென பிடிக்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் பேருந்து ஓட்டுனரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.