CBSE பள்ளிகளுக்கு இடையே தென்மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியானது அரக்கோணம் மாவட்டம் திருத்தணியில் உள்ள GRT கல்லூரியில் நடைபெற்றது. இத்தடகளப் போட்டியில் அல்கெமி பள்ளி மாணவி ஹாசினி கோவிந்தராஜ் நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
