• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்.., மாணவர்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு..!

Byவிஷா

Feb 24, 2023

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக, சிபிஎஸ்இ பொது தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு முழுவதுமாக குறைந்துள்ள நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்க உள்ளது.
12ம் வகுப்பில் மொத்தம் 16, 96, 770 பேர் தேர்வெழுதுகின்றனர். இதில், மாணவர்கள் 9,51,332 பேரும், மாணவிகள் 7,45, 433 பேரும் உள்ளனர். 7240 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. மேலும் நாடு முழுவதும் மொத்தம் 6,759 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. அதன்படி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5ம் தேதி வரையும் நடக்கவுள்ளன. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குவதையொட்டி, மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் காலை 10.30 மணிக்கு தொடங்கி, பகல் 1.30 மணி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அரை மணி நேரத்துக்கு முன்னதாக வரவேண்டும் என்றும், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் படிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என அந்த வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.