• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி திடீர் சோதனை

ByA.Tamilselvan

Sep 7, 2022

அதிமுக அலுவலகம் சூரையாடப்பட்ட வழக்கை துரித்தப்படுத்துமாறு சி.வி. சண்முகம் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி இன்று நேரடி விசாரணையை தொடங்கியுள்ளது. விசாரணையை துரிதப்படுத்த டிஜிபிக்கு உத்தரவிடமாறு சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்றுள்ள சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் ராஜா பூபதி, வெங்கடேசன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணையை எம்பி சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டார்.