• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கத்தோலிக் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைக்கு இடம் வேண்டும்… கிறிஸ்துவ வாழ்வுரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம் !

ByM.Bala murugan

Nov 5, 2023

மேலூர் கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்கு கல்லறைக்கு இடம் வழங்காததை கண்டித்து கிறித்துவ வாழ்வுரிமை இயக்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை மேலூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது . பங்குத்தந்தை அருட்பணி. அந்தோணி பாக்கியம் முன்னிலை வகித்தார். கிறித்துவ வாழ்வுரிமை இயக்க மாவட்ட அரசியல் ஒருங்கிணைப்பாளர் அருட்பணி. எஸ்.லாரன்ஸ் தலைமை தாங்கினார். தமிழக ஆயர் பேரவையின் சட்ட பிரிவு மாநில உறுப்பினர் அருட்பணி. கென்னடி கண்டன உரையாற்றினார்.
தமிழ் தேசிய கிறித்துவ இயக்க நிர்வாகி டயானா சிறப்புரை ஆற்றினார்.
கிறித்துவ வாழ்வுரிமை இயக்க மேலூர் கிளை தலைவர் ஜெ. இருதயராஜ் முன்னுரை ஆற்றினார். மேலூர் வட்டார கத்தோலிக்க இறைமக்கள் கலந்து கொண்டனர்.