• Sat. Apr 27th, 2024

உலகம்

  • Home
  • உக்ரைனுக்கு மேலும் ரூ.3,238 கோடி
    ராணுவ உதவி: அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனுக்கு மேலும் ரூ.3,238 கோடி
ராணுவ உதவி: அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனுக்கு மேலும் ரூ.3,238 கோடி மதிப்புடைய ராணுவ உதவிகளை அமெரிக்கா அனுப்பவுள்ளது.உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னாபின்னமாகியுள்ளன. பல…

ஈரான் விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் விவாதிக்க 12 நாடுகள் கோரிக்கை

ஈரான் விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் விவாதிக்க 12 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஐநா. மனித உரிமைகள் கவுன்சிலின் வாக்களிக்கும் உரிமை உள்ள உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த முன்மொழிவை ஆதரித்துள்ளனர். ஈரானில் ஹிஜாப் உடைக்கு…

ரஷியாவிடம் இருந்து எண்ணெய்யை
இந்தியா வாங்கி கொள்ளலாம்: அமெரிக்கா

ரஷியாவிடம் இருந்து மலிவான விலைக்கு எண்ணெய்யை இந்தியா வாங்கி கொள்வதில் எங்களுக்கு மகிழ்ச்சியே என அமெரிக்கா தெரிவித்து உள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடர்ந்த போரானது பல மாதங்களாக நீடித்து வருகிறது. தூதரக பேச்சுவார்த்தை தோல்வி, பொருளாதார தடைகள் போன்றவைகளால் போரை…

ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்பதுபெருமிதம் – பிரதமர் மோடி

ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது அனைத்து மக்களுக்கும் பெருமிதம் என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.ஜி-20 என்னும் அமைப்பில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி…

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ்…

நேபாளத்தில் 3 முறைநிலநடுக்கம்.. 6 பேர் பலி

நேபாளத்தின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.‘நேபாள நாட்டின் மேற்கே நேற்றிரவு 9.07 மணியளவில் ரிக்டரில் 5.7 அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை…

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள தடை நடவடிக்கை
ஐ.நா. சபையில் சர்வதேச நாடுகள் கண்டனம்

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள வர்த்தக மற்றும் பொருளாதார தடைகளுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான மாபெரும் புரட்சிக்குப் பிறகு, கியூபாவில் உள்ள அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் தேசியமயமாக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து 1962-ம்…

இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு:
வழக்கு பதிவு செய்ய தயங்கிய போலீசார்

நீண்ட இழுபறிக்கு பின்னர் பஞ்சாப் மாகாண போலீசார் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நேற்று வழக்கு பதிவு செய்தனர்.பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்த பஞ்சாப் மாகாண போலீசுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 61.77 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63.79 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த…

49 பயணிகளுடன் ஏரிக்குள் விழுந்தது விமானம்..!

தான்சானியாவில், விமானம் தரையிறங்கும் நேரத்தில் மோசமான வானிலை காரணமாக ஏரிக்குள் விழுந்தது. விமானத்தில் இருந்து இதுவரை 23 பேர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.தான்சானியாவின் வான்ஜா என்ற நகரில் இருந்து புகோபா என்ற நகருக்கு 49 பயணிகளுடன்…