உணவு பொருட்கள் விலை ஏற்றத்தை கண்டித்து மகளிர் காங்கிரஸ் போராட்டம்
உணவு பொருட்கள் விலை ஏற்றத்தை கண்டித்து டெல்லியில் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றம் அருகே திரண்ட அவர்கள், மாட்டுவண்டியில் ஏறிக்கொண்டு போராட்டம் நடத்தினர். அப்போது எரிபொருள், காய்கறி என அனைத்தும் விலையேறிவிட்டதாக…
அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தேவாலயத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவு
அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தேவாலயத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், எந்த விவரங்களும் இல்லாமல், தேவாலயம் கட்டியவருக்கு ஆதரவாக பதில்மனு தாக்கல் செய்த தாசில்தாரருக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில், தேவாலயம் கட்ட எந்த எதிர்ப்பும்…
இந்தியாவிலும் ஒமிக்ரான் பரவியிருக்கலாம்…நிபுணர்கள் எச்சரிக்கை
தென்னாப்பிரிக்காவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனால் உலக நாடுகள் உஷார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமிக்ரான் வகை பாதிப்பு பரவாமல் இருக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே, இந்தியாவில் இதுவரை…
கமல் டிஸ்சார்ஜ் ஆகவில்லை… மக்கள் நீதி மய்யம் ட்விட்டரில் அறிவிப்பு
கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக பரவும் தகவல் உண்மையில்லை என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர்…
குற்றப்பரம்பரையை படமாக்கிறாரா சசிகுமார்?
வேல ராமமூர்த்தியின் கதையை மையமாகக் கொண்டு சசிகுமார் குற்றப்பரம்பரையினர் குறித்த படத்தை எடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சியில் குறிப்பிட்ட சில சாதியினர் குற்றப்பரம்பரையினர் என அடையாளப்படுத்தப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் அரசாங்கத்தால் கொல்லப்பட்டர்கள். இந்த…
ஒமைக்ரான் வைரஸை 3 மணி நேரத்தில் கண்டறியும் வசதி – தமிழகத்தில் அறிமுகம்
கொரோனாவை விட அதிக ஆபத்து உடையது என்று விஞ்ஞானிகளால் எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கும் ஒமைக்ரான் வைரஸ், 13 நாடுகளில் பரவியுள்ளது. இதனைத் தடுப்பதற்காக இந்தியா மற்றும் தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸை 3 மணி நேரத்தில்…
புதரில் சிக்கி தவித்த கரடி- வனத்துறையினர் மீட்பு
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான கரடிகள் வசிக்கின்றன. இந்நிலையில், பவானிசாகர் வனச்சரகம் புதுப்பீர்கடவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி அப்பகுதியிலுள்ள தனியார் காகித ஆலை அருகே பட்டா நிலத்தில் சுற்றித் திரிந்த போது அங்குள்ள ஒரு முட்புதரில் இருந்த…
பால்மா தீவில் எரிமலை குழம்பு…புகைமண்டலமாக காட்சியளிக்கும் ஸ்பெயின்
ஸ்பெயின் நாட்டின் பால்மா தீவில் எரிமலையில் புதிதாக லாவா குழம்பு வெளியேறுவதால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. ஸ்பெயின் லா பால்மா தீவில் உள்ள எரிமலையில் இருந்து நெருப்பு குழம்பு ஆறாக ஓடும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.…
இயற்கை சீற்றத்தால் தமிழகத்தில் 54 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்
2021-ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம், புயல், நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்கள் காரணமாக 54 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 11,636 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. தமிழகத்தின் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து…
குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது
பெங்களூருவிலிருந்து சேலம் வழியாக தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். பெங்களுருவிலிருந்து சேலம் வழியாக குட்கா தடைசெய்யப்பட்ட கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், கருப்பூர் சுங்கச் சாவடி அருகே சேலம்…