கோவில்பட்டி ஜீ.வி.என். கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு !!
கோவில்பட்டி ஜீ.வி.என். கல்லூரியில் 1981 ம் கல்வியாண்டில் பி.எஸ்.சி. கணித பிரிவில் படித்த மாணவர்கள் சந்திப்பு. ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜீ.வி.என். கல்லூரியில் 1981 ம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கோவில்பட்டி சில்வர் ஸ்டோன்…
கோவில்பட்டி அருகே சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஒண்டி வீரன் நினைவு தினம் அனுசரிப்பு.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சமத்துவ மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர் பாஸ்கரன்…
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்..!
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி மாதத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து வரும் 26ம் தேதி வெள்ளிக்கிழமையன்று தேரோட்டம் நடைபெறும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி மற்றும் மாசி மாத திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.…
கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சுதந்திரதின விழா.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர்…
கழுகுமலையில் பாஜகவினர் கையில் தேசிய கொடியை ஏந்தி விழிப்புணர்வு பிரச்சாரம். …
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்று அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜகவினர் தேசிய கொடியை ஏந்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம்…
வானரமுட்டியில் கலைஞரின் நினைவு தினம் அனுசரிப்பு.
தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டியில் மறைந்த முன்னாள் முதல்வரும், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 4 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வானரமுட்டி ஊராட்சி மன்றத் தலைவர் இசக்கியம்மாள் தலைமை வகித்தார். வானரமுட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், திமுக…
கழுகுமலை அருகே கிராம பஞ்சாயத்தில் ஜெ.ஜெ.எம். திட்டத்தின் கீழ் முறைகேடு.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் யூனியனுக்கு உட்பட்ட கே. துரைச்சாமிபுரம் பஞ்சாயத்து தலைவர் மல்லிகா தமிழக உள்ளாட்சி துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறப்படுவதாவது- தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் யூனியன் கே.துரைச்சாமிபுரம் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறேன். நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்…
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் சீனா
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் சீனா நிதியுதவி அளித்ததாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் புகார் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அதன் உரிமையாளரான வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்…
கோவில்பட்டியில் அரசு கல்லூரியில் வைத்து பேராசிரியருக்கு அடி – உதை…
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணிதத்துறை தலைவர் பேராசிரியர் சிவசங்கரன் என்பவரை மாணவர்கள் பலர் சேர்ந்து கல்லூரியில் வைத்து அடித்து உதைத்து இருக்கின்ற சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தையே பரபரப்பாக்கி இருக்கின்றது. கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனின் காதல் விவகாரம்…
கழுகுமலையில் பாஜக செயற்குழு கூட்டம்
கழுகுமலையில் பாஜக கயத்தார் மேற்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம் கம்மவார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கயத்தார் மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் தலைமை வகித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணை தலைவர் இராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொதுசெயலாளர்…