• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 85

குறள் 85

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சில் மிசைவான் புலம். பொருள் (மு.வ): விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.

குறள் 84

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல்.பொருள் (மு.வ): நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

குறள் 83

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுதல் இன்று.பொருள் (மு.வ):தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

குறள் 82

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. பொருள் (மு.வ): விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.

குறள் 81

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு. பொருள் (மு.வ): வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.

குறள் 80

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு பொருள் (மு.வ): அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.

குறள் 79

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப்பு அன்பி லவர்க்கு. பொருள் (மு.வ): உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்..

குறள் 78

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரந்தளிர்த் தற்று.பொருள் (மு.வ): அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

குறள் 77

என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம். பொருள் (மு.வ): எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

குறள் 75

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்துஇன்புற்றார் எய்தும் சிறப்பு.பொருள் (மு.வ): உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.