• Fri. Apr 26th, 2024

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 324:

குறள் 324:

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்கொல்லாமை சூழும் நெறி.பொருள் (மு.வ):நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.

குறள் 323

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்பின்சாரப் பொய்யாமை நன்று. பொருள் (மு.வ): இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.

குறள் 322

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.பொருள் (மு.வ):கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

குறள் 321:

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும். பொருள் (மு.வ): அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.

குறள் 320:

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர்.பொருள் (மு.வ):துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.

குறள் 319

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னாபிற்பகல் தாமே வரும். பொருள் (மு.வ): முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

குறள் 318

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோமன்னுயிர்க்கு இன்னா செயல். பொருள் (மு.வ): தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.

குறள் 317:

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்மாணாசெய் யாமை தலை.பொருள் (மு.வ):எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.

குறள் 316

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமைவேண்டும் பிறன்கண் செயல்.பொருள் (மு.வ):ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

குறள் 315:

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்தந்நோய்போல் போற்றாக் கடை.பொருள் (மு.வ):மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.