• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 781:

குறள் 781:

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு.பொருள் (மு.வ):நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.

குறள் 780:

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடுஇரந்துகோள் தக்கது உடைத்து.பொருள் (மு.வ):தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.

குறள் 779:

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரேபிழைத்தது ஒறுக்கிற் பவர்.பொருள் (மு.வ):தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.

குறள் 778:

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினும் சீர்குன்றல் இலர்பொருள் (மு.வ):போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.

குறள் 777:

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்கழல்யாப்புக் காரிகை நீர்த்து.பொருள் (மு.வ):பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.

குறள் 776:

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்வைக்கும்தன் நாளை எடுத்து.பொருள் (மு.வ):வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.

குறள் 775:

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.பொருள் (மு.வ):பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

குறள் 773

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்ஊராண்மை மற்றதன் எஃகு பொருள்(மு.வ): பகைவரை எதிர்க்கும்‌ வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர்‌; ஒரு துன்பம்‌ வந்தபோது பகைவர்க்கும்‌ உதவி செய்தலை அந்த ஆண்மையின்‌ கூர்மை என்று கூறுவர்‌.

குறள் 772

கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது பொருள்(மு .வ): காட்டில்‌ ஓடும்‌ முயலை நோக்கிக்‌ குறிதவறாமல்‌ எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்டவெளியில்‌ நின்ற யானை மேல்‌ எறிந்து தவறிய வேலை ஏந்துதல்‌ சிறந்தது.

குறள் 771:

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைமுன்நின்று கல்நின் றவர்.பொருள் (மு.வ):பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்.