• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

வாகனங்கள் மோதியதில்15 தொழிலாளர்கள் காயம்..,

ByS. SRIDHAR

Jan 2, 2026

விராலிமலை தனியார் தொழிற்சாலை பணி முடிந்து வேன், பேருந்து வாகனங்களில் சென்ற தொழிலாளர்கள் 15 பேர் சாலை விபத்தில் காயமடைந்தனர்

விராலிமலையில் வாகன உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் பணி முடிந்து வழக்கம் போல வேன் மற்றும் பேருந்துகளில் விராலிமலை சென்று கொண்டிருந்தனர். திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலை தேத்தாம்பட்டி பிரிவு அருகே தொழிலாளர்கள் வாகனம் சென்று கொண்டிருந்தது. முன்னால் லாரி, கார் சென்றுள்ளது அப்போது நாய் ஒன்று குறுக்கே சென்றதால் கார் ஓட்டுநர் பிரேக் அடித்துள்ளார் இதை எதிர்பார்க்காத லாரி ஓட்டுநர் கார் மீது மோதியுள்ளார். இதை தொடர்ந்து வந்த தனியார் தொழிற்சாலை வேன் லாரி மீது மோத அதன் பின்னால் வந்த பேருந்து வேன் மீது மோதியுள்ளது. இதில் வேனில் பயணித்த 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்து விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் தகவல் அறிந்து விராலிமலை அரசு மருத்துவமனைக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கு மருத்துவர் இல்லாமல் முதலுதவிக்கு காத்திருந்த நோயாளிகளுக்கு முதலுதவி செய்து ஆறுதல் தெரிவித்தார். இந்த செயலை கண்ட பொதுமக்கள் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை வெகுவாக பாராட்டினர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.