• Fri. Mar 6th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Byமதி

Nov 3, 2021

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சேலம் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் அம்மாபேட்டையில் நேற்று முன்தினம் சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு தினம், தமிழக பெருவிழா ஆகியவை நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். இந்த விழாவில் அவர் தமிழ்நாட்டுக்கான கொடி என்று கூறி அங்கு ஒரு கொடியை ஏற்றி வைத்தார். இதுகுறித்து அம்மாபேட்டை ரூரல் கிராம நிர்வாக அலுவலர் ராஜா அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதன்பேரில் சீமான் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல், கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்காதது உள்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.