• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மத்திய, மாநில அரசுகளை அவதூறாக பேசிய திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு

Byமதி

Nov 25, 2021

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி. இவர் மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருபவர். தற்போது மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் என்பவர் கடந்த மாதம் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலால் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த போராட்டத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி கலந்துகொண்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மத்திய, மாநில அரசுகளை அவதூறாக பேசியதாக அவர் மீது 153,505(1),(3) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் கோட்டைப்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.