• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சிறுவனை எட்டி உதைத்த கார் உரிமையாளர் அதிரடி கைது – வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Nov 4, 2022

கார் மீது சாய்ந்து நின்ற சிறுவனை எட்டி உதைத்த கார் உரிமையாளரை அதிரடியாக கைது செய்த போலீசார்.
கேரளா மாநிலம் தலசேரியில் உள்ள சாலை ஒன்றின் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த கார் மீது 6 வயது சிறுவன் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென காரின் உள்ளே இருந்து வெளியே வந்த அதன் உரிமையாளர் சிறுவனை திட்டிக் கொண்டே வேகமாக எட்டி உதைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிசிடிவியில் பதிவான இந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த வீடியோவில் அங்கிருந்த பொது மக்கள் சிலர் சிறுவனை தாக்கியது தொடர்பாக கேட்டதற்கு தன் செயலை நியாயப்படுத்தி பேசிய கார் உரிமையாளர், காரை வேகமாக எடுத்து சென்றுள்ளார்.சம்பந்தப்பட்ட சிறுவன் ராஜஸ்தானைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளரின் மகன். படுகாயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
வீடியோ வைரலானதை அடுத்து சம்பவத்த உறுதி செய்த போலீசார் சம்பந்தப்பட்ட கார் எண்ணைக் கொண்டு பொண்ணியம்பாலம் பகுதியை சேர்ந்த முகமது ஷின்ஷாத் (20) என்கிற கார் உரிமையாளரை கண்டுபிடித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.