• Thu. Jan 1st, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கேப்டன் இரண்டாம் ஆண்டு நினைவுஅஞ்சலி..,

BySeenu

Dec 31, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுஅஞ்சலி சிங்கைப் பகுதிக்கு உட்பட்ட கீழ்கண்ட வட்ட கழகங்களில் அனைத்து வார்டுகளிலும் அன்னதானம் நடைபெற்றது.

சிங்கை பகுதி அவைத்தலைவர் ஜி சுரேஷ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட கழக செயலாளர் சிங்கைkசந்துரு அவர்கள் அனைத்து வார்டுகளிலும் கலந்து கொண்டு மலர்அஞ்சலி செலுத்தி அனைத்து வார்டுகளிலும் அன்னதானத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்.

மேலும் இந்த நிகர்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ் அரவிந்தன், குணா, பகுதி கழக நிர்வாகிகள் சிவ சண்முகம் ,அருணா, மோகன், கேப்டன் ஆறுமுகம் ,. வட்ட கழக செயலாளர்கள் நா செல்வராஜ், பாக்யராஜ், மாயக்கண்ணன், வேல்ராஜ், மற்றும் பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . மேலும் 53 வது வட்டத்தில் வட்ட கழக செயலாளர் நா. செல்வராஜ் அவர்கள் தலைமையிலும், 55 வட்டக் கழகத்தில் ஹசன் பாய் வட்ட பொறுப்பாளர் அவர்கள் ஏற்பாட்டில் சிங்கைப் பகுதி நிர்வாகி மோகன் அவர்கள் தலைமையில், மற்றும் 56 வது வட்டம் பாக்யராஜ் அவர்கள் தலைமையிலும் 57வது வட்டம் மாயக்கண்ணன் அவர்கள் தலைமையிலும் 59 ஆவது வட்டக் கழகத்தில் வட்ட செயலாளர் அண்ணாதுரை அவர்களின் ஆசியுடன் பகுதி நிர்வாகி கேப்டன் ஆறுமுகம் அவர்கள் ஏற்பாட்டிலும், 60 வது வட்டக் கழகத்தில் வட்டக் கழக செயலாளர் வேலு அவர்கள் தலைமையிலும் 61வது வட்டத்தில் பகுதி கழக துணை செயலாளர் ரவிச்சந்திரன், அவர்கள் தலைமையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனை நிர்வாகிகளுக்கும் சிங்கை பகுதி கழகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டு இந்த நிகழ்வுக்கு சிங்கை பகுதி செயலாளர் சென்னை கேப்டன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த சிங்கை பகுதிக்கு உட்பட்ட மாவட்ட பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் நீனா வேலுசாமி கிருஷ்ணமூர்த்தி சுந்தரராஜ் சரவணன் அண்ணாதுரை திருமுருகன் பிரகாஷ் அழகர்இரா செந்தில்குமார் சிங்கை பகுதி கழக செயலாளர்,காத்திபுரம் பகுதி செல்வம்,மூர்த்தி ,வேணுகோபால், செல்வபிரதாப்,ராகவன்,சரவணன்,அன்புராஜ்,பாபு,பாண்டியன்,ராஜபாண்டி உள்ளிட்ட ஏராளமான தேமுதிகவினர் அனைத்து வார்டுகளிலும் அன்னதானத்தை பொதுமக்களுக்கு வழங்கினர்.