• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

முன் பதிவு செய்ய முடியாது-ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

Byகாயத்ரி

Nov 15, 2021

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டடது. அதன் பிறகு ஊரடங்கு நேரத்தின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக நீண்ட தூர சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.


இந்த சிறப்பு ரயில்களில் சாதாரண கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. முன்பதிவு இல்லா பெட்டிகள் இணைக்கப்படவில்லை. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அந்த வரிசையில் ரயில்களின் சேவையும் தொடங்கின.


இந்நிலையில் கொரோனாவுக்கு முந்தய கால ரயில் சேவையை அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு முதல் நவ.20-ம் தேதி வரை இரவு 11:30 மணி முதல் வரை அதிகாலை 5:30 மணி வரை முன்பதிவு வசதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. மேற்கண்ட 6 மணி நேரம் எந்த ரயில் டிக்கெட்களும் முன்பதிவு செய்யமுடியாது.


முன்பதிவு இணையதள வசதியை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.