மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் கட்டிடடக்கலைப் துறை மற்றும் CEPT – பல்கலைக்கழம்- அகமதாபாத் உடனான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் திட்டமிடலில் முதுகலை பட்டப் (M..Plan) படிப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு கல்லூரிகளின் தலைவர்களாலும் கையொப்பம் இடப்பட்டது. மேலும் உட்புற வடிவமைப்பு (B.Des-Interior Design) இளநிலைப் பட்டப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. கட்டிடக்கலை துறை தலைவர்- Dr. ஜினு கிச்சலே மற்றும் – கல்லூரி ரெஜிஸ்ட்ரார் Dr. ராஜாராம் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்களை வரவேற்று பேசினர்.
தியாகராஜர் பொறியியல் கல்லூரி மற்றும் தியாகராஜர் கலைக் கல்லூரியின் கூட்டு முயற்சியாக தொடங்கப் பெற்ற தியாகராஜர் Centre for Sustainability தனது குழுமங்களின் சூழல் சார்ந்த செயல் பாடுகளுக்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறது என்று கூறினார். தியாகராஜர் நிறுவனங்களின் சூரிய மின் உற்பத்தித் திறன் தனது மின் தேவைகளை தானே பூர்த்தி செய்யும் அளவு சிறந்து விளங்குவதை விளக்கினார். உயிர் வாய்வு(Bio-gas) உற்பத்தியின் மூலம் கல்லூரியின் விடுதிகளின் உணவு உற்பத்தி பூர்த்தி செய்யப் படுவது தண்ணீர் மறு சுழற்சியின் மூலம் நீரின் பயன்பாடு பெருமளவு குறைக்கப்படுவது, கல்லூரி வளாகத்தில் பாதுகாக்கப்படும் சுற்றுச் சூழல் ஆகியவற்றைக் குறித்து விளக்கினார். தியாகராஜர் பொறியியற் கல்லூரியின் கட்டிடக்கலைத் துறையில் Thiagarajar School of Environmental Design & Architecture ( T’SEDA) என்று பெயர் மாற்றம் செய்யப் படுவதை ஒரு மைல்கல் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இங்கு தொடங்கப் படவுள்ள M.Plan பட்டப்பு தற்போதய புவி வெப்பமயமாதல் மற்றும் நகரமயமாதல் போன்ற பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வாகிறது என்று விரிவாகப் பேசினார்.
அன்ஷுல் மிஸ்ரா தனது உரையில் வளர்ந்து வரும் நகரங்களின் ஒழுங்கற்ற தன்மை பலவித இடையூறுகளை உருவாக்குகிறது என்றும் இந்த M.Plan பட்டப்படிப்பு தற்போதைய கால கட்டத்திற்கு மிகவும் அவசியமானது என்றும் தியாகராஜர் பொறியியல் கல்லூரியைப் போன்ற தரமான நிறுவனத்தில் இதை அறிமுகம் செய்வதற்கு திரு. ஹரி தியாகராஜன் அவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார். அன்ஷுல் மிஸ்ரா IAS அவர்களும் இந்தியாவில் M.plan போன்ற பட்டப் படிப்பின் தேவை குறித்தும் அதிகரித்து வரும் நகரங்களின் திட்டமிடலின் அவசியத்தையும் விளக்கினார். மதுரையுனுடனான தனது தொடர்பு குறித்தும் இந்நகரத்தின் வளர்ச்சிப்பணிகள் மற்றும் திட்டமிடலில் தியாகராஜர் கல்லூரியின் கட்டிடக்கலைத் துறையின் பங்களிப்பு குறித்தும் நினைவு கூர்ந்தார். சென்னை பெருநகரத்தின் செயலாளராக பொறுப்பு வகிக்கும் அன்ஷுல் மிஸ்ரா அவர்கள் CMDA அமைப்பில் பணியாற்ற கட்டிடக்கலை மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
Dr.பர்ஜுர் மெஹ்தா – CEPT- ன் தலைமை அதிகாரி, CEPT மற்றும் TCE – ன் பொதுவான கொள்கைகள் மற்றும் நோக்கங்களே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வழி வகுத்தது என்று சுட்டி காட்டினார். இந்த பட்டப்படிப்பு வெறும் கோட்பாடுகளாக நின்று விடாமல் செயல் முறை களுடன் கூடிய பாடத் திட்டங்களுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது என்று எடுத்துரைத்தார்.
தியாகராஜர் பொறியியல் கல்லூரி M.Plan & B.Des ஆகிய இந்தப் பட்டப் படிப்புகளை அறிமுகம் செய்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் முன்னோடியாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.