• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கமல்ஹாசன் மகள் காதல் கல்யாணத்தில் முடியுமா?

நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது குறிப்பிட்டு சொல்லும்படியான படங்கள் இவருக்கு இல்லை. தெலுங்கு சாலார் படத்தில் பிரபாஸ் உடன் நடித்த ஸ்ருதிஹாசன், தற்போது, பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். பிசியான நடிகையாக இல்லை என்றாலும், சமூக வலைதளங்களில் தீவிரமாக இருப்பவர் ஸ்ருதிஹாசன்.

தற்போது டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், ஸ்ருதிஹாசனுடன் திருமணம் குறித்து சாந்தனுவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் ஒரு பதில் கொடுத்திருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில், ஸ்ருதிஹாசன் நடிகை என்பதை தாண்டி தீவிரமான இசைக்கலைஞர். எங்களை இணைத்தது இசைதான். ஒருவரை ஒருவர் நாங்கள் நேசிக்கிறோம். இப்போதுதான் டேட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளோம். அதோடு இசை மற்றும் ஆடைகள் வடிவமைத்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். இது எங்களது ஆக்கபூர்வமான பயணமாகும். எங்களது படைப்புகள் குறித்து உரையாடி கொள்கிறோம். இது எங்களை ஊக்குவிப்பதோடு அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவும் உதவி செய்கிறது. இதுதான் தற்போதைக்கு எங்களுக்குள் இருக்கும் உறவு நிலை. திருமணத்தை விட இதில்தான் தீவிரம் காட்டி வருகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.