சென்னையில் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் தேமுதிக அலுவலகத்தில் தங்குவதற்கு, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,
தமிழகம் முழுவதும் கனமழை பெய்துவரும் நிலையில், தேமுதிகவின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் அவரவர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவியை உடனடியாக பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
‘இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே’ என்ற நமது கொள்கையின்படி நம்மால் இயன்ற உதவியை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்வோம். சென்னையில் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள், மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தேமுதிக அலுவலகத்தைத் தங்குவதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம். அங்கு தங்குபவர்களுக்கு தேவையான உணவும் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தேமுதிக அலுவலகத்தில் தங்குவதற்கு அழைப்பு
