டிசிஓஏ தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் சார்பில் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சுரண்டை, தென்காசி ஆகிய இடங்களில் நடைபெற்றது.
மாநாட்டில், விபத்தால் உயிரிழக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு இழப்பீடு வழங்கி வந்த நிலையில், கொரோனாவால் உயிரிழப்போருக்கு 3 லட்ச ரூபாய் ரொக்கப் பணமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது! மேலும், கேபிள் டிவியில் வேலை பார்க்கும் அனைவரும் இச்சங்கத்தில் கண்டிப்பாக இணைய வேண்டும் இச் சலுகைகளை பெற கண்டிப்பாக உறுப்பினர் அட்டை வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது! மேலும், வரும் 23ஆம் தேதி முதல் நியூஸ் தமிழ் என்ற செய்தி சேனல் டிசிசிஎல் கம்பெனியில் முதல் சேனலாக வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சேனலில் பணிபுரிய கேபிள்டிவி ஆபரேட்டர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
விழாவில் எஸ். முகமது அலி ஜின்னா வரவேற்றார். முன்னிலையாக சங்கரன்கோவில் தாலுகா துணைத்தலைவர் கே. சந்திரபோஸ், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். சி.ஓ.எம் மாநில துணைத் தலைவர் கோ.தாமோதரன் சிறப்புரையாற்றினார்! மாநில துணைத்தலைவர்கள் தமிழன், ராஜேந்திரபிரபு. கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்
விழாவில் 200க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு தாலுகாகளுக்கும் தலைவர் செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர் . நிகழ்ச்சி ஏற்பாடுகளை அழகு ராஜா, முத்தையா, ராமலிங்கம் ஆகியோர் செய்து இருந்தனர்! முருகானந்தம் நன்றியுரை வழங்கினார்!