சென்னை அடுத்த தாம்பரம் சானடோரியம் பகுதியில், மத்திய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Indian Institute of Cost Accountants of India (இந்திய கணக்கு பட்டயாளர்கள் நிறுவனம்) சார்பில் செங்கல்பட்டு மாவட்ட கிளை இன்று தொடங்கப்பட்டது.

இந்த புதிய கிளையை நிறுவனத் தலைவர் சரன்ஜோத் சிங் நந்தா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இக்கிளையில் சார்டட் அக்கவுண்டன்சி, ICW (CMA) உள்ளிட்ட கணக்கு சார்ந்த படிப்புகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரசன்ன குமார், கணக்கு பட்டயாளர் படிப்புக்காக பெரியளவு நிதி அல்லது கடினமான வழிமுறைகள் தேவையில்லை என்றும், தீவிரமான படிப்பு மட்டும் போதுமானது என்றும் தெரிவித்தார். மேலும், இந்த படிப்புக்கான கட்டணம் சுமார் ரூ.72,000 மட்டுமே எனவும், ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்குக் குறைவாக இருப்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன என்றும் கூறினார்.

மேலும், 6ம் வகுப்பு முதலே மாணவர்கள் வணிகம், கணக்கியல், பங்கு சந்தை போன்றவற்றை தங்கள் வழக்கமான பாடங்களுடன் இணைத்து படிக்கக்கூடிய புதிய கல்வி முறையை மாநில கல்வித் துறைக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.






