• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

பொதுமக்கள் பாதிக்காத வகையில் பேருந்துகள் இயக்கப்படும்.., மதுரை மண்டல தொமுச பொதுச் செயலாளர் தகவல்..!

ByKalamegam Viswanathan

Jan 8, 2024
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் பேருந்துகள் இயக்கப்படும் என மதுரை மண்டல தொமுச பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஒன்பதாம் தேதி முதல் ஈடுபடப் போவதாக கூறியுள்ளனர். அது தொடர்பாக எட்டாம் தேதி சோழவந்தான் தொமுச நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து பின் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மண்டல பொதுச்செயலாளர் மேலூர் அல்போன்ஸ்  கூறியதாவது:
மதுரை மாவட்ட போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகளுடன் ஒன்பதாம் தேதி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து பணிமனையில் தகவல் தெரிவித்து வந்தோம் என்றார். இதில், மதுரை மன்டல தலைவர் கார்த்தி சுரேஷ், பொருளாளர் மணிகண்டன், துணை பொதுச் செயலாளர் அய்யனார், சோழவந்தான் போக்குவரத்து பணிமனை தொமுச தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் ஜோதி ராமன், துணைத் தலைவர் சேவியர், துணைச் செயலாளர் பாலமுருகன், மேலக்கால் ராஜா மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.