• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் எறியூட்டும் மையான கொட்டகை அமைக்க பூமி பூஜை..!

ByP.Thangapandi

Jan 8, 2024
உசிலம்பட்டி அருகே சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 4 லட்சம் மதிப்பீட்டில் எறியூட்டும் மையான கொட்டகை அமைப்பதற்கு எம்எல்ஏ பி.அய்யப்பன் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சடையாண்டிபட்டி கிராமத்தில் சுமார்100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் சாலை வசதி, மையான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி  உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பனிடம் கோரிக்கை வைத்தனர்.

மேலும் இறந்தவரின் உடலை எறியூட்டுவதற்கு மழை காலங்களில் சிறமத்திற்குள்ளாகி வருவதாகவும் எறியூட்டும் கொட்டகை அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்த சூழலில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 4 லட்சம் மதிப்பீட்டில் உசிலம்பட்டி அதிமுக (ஒபிஎஸ் அணி) எம்எல்ஏ பி.அய்யப்பன் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.