திண்டுக்கல் அருகே அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து – 15-க்கும் மேற்பட்டோர் காயம்டைந்தனர்.
திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே திண்டுக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடகனாறு பாலம் அருகே
கம்பத்திலிருந்து பெங்களூருக்கு அதிவேகமாக சென்ற சென்ற ஆம்னி பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பெண்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









