• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பகுதியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்

ByKalamegam Viswanathan

Mar 5, 2023

சோழவந்தான் பகுதியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விழா காலங்கள் மற்றும் முகூர்த்த தினங்களில் திருமண மண்டபங்கள் மற்றும் வீடுகளில் நிகழ்ச்சி நடத்துபவர்கள் ஊர்வலமாக வரும் போது பட்டாசுகள் வெடிப்பதால் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மேலும் கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் அதிக சத்தத்துடன் வெடிக்கக் கூடிய பட்டாசுகளையும் மற்றும் மிக நீளமான சரவெடியுடன் கூடிய பட்டாசுகளையும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் வெடிக்கச் செய்வதால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகின்றனர் .ஆகையால் மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி நிர்வாகமும் சிறப்பு கவனம் எடுத்து பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் மீறி பட்டாசுகள் வெடித்தால் அபராதம் மிதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர் .


இது குறித்து சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த முனைவர் பாலு கூறும் போது
நான் சோழவந்தான் சின்ன கடை வீதி பகுதியில் குடியிருந்து வருகிறேன்இன்று ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த தினம் என்பதால் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தபோது அந்த வழியாக காதணி விழாவிற்கு ஊர்வலமாக சென்றவர்கள் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகளை வெடித்தும் மிக நீளமான சரவெடிகளை வெடித்துக் கொண்டும் சென்றதால் வீட்டில் உள்ள கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சேதங்களை ஏற்படுத்தி சென்றது மேலும் வீட்டில் கேஸ் சிலிண்டர் உள்ள பகுதிகளில் பட்டாசு துகள்கள் வெடித்து சிதறியதில் மிகப்பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தது இது குறித்து நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் கூறியபோது அதைப்பற்றி அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை மேலும் நாங்கள் அப்படித்தான் பட்டாசுகளை வெடிக்க விட்டு செல்வோம் என்று ஆணவப்போக்குடன் கூறி சென்றது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது மேலும் பட்டாசுகள் வெடிப்பதால் அதிலிருந்து வரும் ப புகையும் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி விட்டு செல்கிறது மேலும் குப்பைகள் தேங்குவதால பேரூராட்சி பணியாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது ஆகையால் சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகமும் சோழவந்தான் காவல் துறையும் இது குறித்து விரைந்து முடிவெடுத்து சோழவந்தான் பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் மீறி வெடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.