அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கண்டித்து பட்டுக்கோட்டையில் இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று மாலை டிரம்ப்பின் உருவப்படத்தை எரித்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

வெனிசுலா அதிபரை கைது செய்து ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கண்டித்து தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாலை தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வெனிசுலா அதிபர் நிக்கோலாஸ்மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து, இறையாண்மை கொண்ட ஒரு நாட்டை வலுக்கட்டாயமாக கைப்பற்றி, ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கண்டித்தும், வெனிசுலாவிற்கு ஆதரவாக ஒன்றிய அரசு குரல் எழுப்பிட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து டிரம்ப்பின் உருவப்படத்தை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.




