கட்டுமான பொருட்களான ஜல்லி, மணல் வகைகள், சிமெண்ட் மற்றும் கம்பி வகைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பொருட்களின் விலை சுமார் 40% அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கு அகில இந்திய கட்டுனர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் உயர்த்தப்பட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாநில பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு வேலை நிறுத்தத்துடன் கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று அகில இந்திய கட்டுனர்கள் சங்கம் மற்றும் புதுச்சேரி பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய கட்டுனர்கள் சங்க தலைவர் அருணகிரி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரியில் உள்ள பில்டர் அசோசியேசன் ஆப் இந்தியா மற்றும் புதுச்சேரி சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் உள்ளிட்ட ஐந்து கட்டுமான சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது…
தொடர்ந்து கட்டுமான பொருட்களின் விலை 40% முதல் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது இது கண்டிக்கத்தக்கது இதனால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது எனவே உடனடியாக விலை உயர்வை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.





