கோவையில் கட்டுமானம் தொடர்பான பில்டு எக்ஸ்கான் (BUILD EXCON) கண்காட்சி. கோவையில் அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பாக கட்டுமான பொருட்கள் கண்காட்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.
இதற்கான துவக்க விழாவில் கோவை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார் , இந்திய கட்டுமான சங்கத்தின் தேசிய தலைவர் பொறியாளர் விஸ்வநாதன், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
பில்ட் எக்ஸ்கான் எனும் தலைப்பில்,நவம்பர் 22 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில்,நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமானம் தொடர்பான அனைத்து துறையினர் அரங்குகள் அமைத்துள்ளனர்.
குறிப்பாக கட்டுமான துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் நவீன தொழில் நுட்பம் தொடர்கான அரங்குகள், இறக்குமதி செய்யப்பட்ட கிரானைட் மற்றும் மார்பிள் கற்கள், நவீன மின்சாதனங்கள், இயற்கை கட்டுமானம், நவீன பயோ செப்டிக் டேங்க்,
பழுதடையாத நவீன நிலத்தடி நீர்தேக்கத்தொட்டி, புதுமையான லிப்ட்கள்,புதிய வகை தரைத்தள டைல்ஸ் கற்கள் மற்றும் வீட்டு உள்அலங்காரப் பொருட்கள் போன்ற 150 க்கும் மேற்பட்ட அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பில்டு எக்ஸ்கான் கண்காட்சி நிர்வாகிகள் விஜயகுமார், ராஜரத்தினம், மணிகண்டன், செவ்வேள், பிரேம்குமார், பாபு, ரவி உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெறும் கண்காட்சியில் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.