பிஎஸ்என்எல் சேவையை பாதுகாக்க வேண்டுமென திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் கூறினார். திண்டுக்கல்லில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
BSNL 25 வது நிறைவு வெள்ளிவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. BSNL துறையை பாதுகாக்க வேண்டும். BSNL சேவை மக்களுக்கு முழுமையாக இருக்க பார்த்தால் திண்டுக்கல்லில் பிரச்சினை உள்ளது. BSNL டவர் குறைபாடு உள்ளது. இந்த துறை BSNL பாதுகாக்குமா என்ற சந்தேகம் உள்ளது.

தனியாருக்கு 4G சேவை வழங்கிய போதே BSNL 4G வழங்கி இருக்க வேண்டும். அப்படி நடந்து இருந்தால் BSNL வளர்ந்திருக்கும். இன்னமும் BSNL 5G சேவை கிடைக்காத நிலை உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் BSNL 424 டவர் உள்ளது. மலைப்பகுதிகளில் போடப்பட்டுள்ள BSNL டவர் சரியாக கிடைப்பதில்லை. பட்டன் செல்போன் வைத்திருக்கும் மக்களுக்கு டவர் முற்றிலுமாக கிடைப்பதில்லை.
மத்திய அமைச்சர் பார்த்து நான் கோரிக்கை வைத்தேன். 4G டவர் போடப்பட்ட இடங்களில் 2 G டவர் மக்களுக்கு கிடைப்பதில்லை. இது சம்பந்தமாக எந்த முன்னேற்றமும் இல்லை. சிறுமலை மலைப்பகுதிகளில் BSNL சேவை இல்லை. குஜிலியம்பாறை, பாளையம் BSNL சேவை இல்லை. KC. பட்டி மலைப்பகுதி, கொத்தையும் பகுதியிலும் BSNL சேவை இல்லை.
அரசு திட்டங்கள் நிறைவேறுவதற்கு BSNL டவர் தடையாக உள்ளது. இந்த சேவையை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சரிடம் விளக்கி உள்ளேன், என்றார்.